மிக்சர் சாப்பிடுறாங்களா… ஜெய்பீம் பட விவகாரத்தில் திரையுலகை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்…!

டைரக்டர் ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படம் ஜெய்பீம். சூர்யாவின் 2டி என்டர்டைன்மென்ட் தயாரித்துள்ள இந்த படத்தில் சூர்யா முதல் முறையாக வக்கீல் ரோலில் நடித்துள்ளார். இந்த படம் நவம்பர் 2 ம் தேதி அமேசான் பிரைம் வீடியோவில் வெளியிடப்பட்டது.

பல உண்மை சம்பவங்களை இந்த படம் வெளிக் கொண்டு வந்துள்ளதாக ஜெய்பீம் படத்திற்கு பாராட்டுக்கள் குவிந்தன. தமிழக முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் ஜெய்பீம் படத்தை பாராட்டினர்.

சர்வதேச திரைப்படங்களுக்கு ஆன்லைன் அடிப்படையில் ரேட்டிங் தரும் அமைப்பான IMDb ரேட்டிங்கில் ஜெய்பீம் முதலிடத்தை பிடித்தது.

சூரரைப் போற்று படத்திற்கு பிறகு சூர்யாவிற்கு சர்வதேச அங்கீகாரத்தை ஜெய்பீம் படம் பெற்று தந்துள்ளது. இதனால் சூர்யாவின் அடுத்தடுத்த படங்கள் மீதான எதிர்பார்ப்பு எழுந்தது.

அதோடு இந்த படத்தில் குறிப்பிடப்பட்ட ராஜாகண்ணு குடும்பத்திற்கும் உதவிகள் குவிந்து வந்தன. அந்த சமுதாயத்தினரின் முன்வேற்றத்திற்காக சூர்யா சார்பில் முதல்வரிடம் ரூ.1 கோடி வழங்கப்பட்டது.

நடிகர் லாரன்ஸ், ராஜாகண்ணுவின் குடும்பத்திற்கு வீடு கட்டி தருவதாக அறிவித்தார்.
ஆனால் ஜெய்பீம் படத்தை பார்த்து விட்டு சில அரசியல் கட்சிகள், ஜாதி அமைப்புக்கள் சூர்யாவிற்கு கடும் கண்டனம் தெரிவித்தன.

சினிமாவிற்காக ஒரு சமூக மக்களை இழிவுபடுத்தி காட்டி உள்ளதாக சூர்யாவிற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. ஆரம்பத்தில் ஒரு காட்சியில் வரும் காலண்டரில் ஆரம்பித்த எதிர்ப்பு, தற்போது ஜாதி பிரச்சனையாக மாறி உள்ளது.

இதனால் சூர்யாவை தாக்கினால் ரூ.10 லட்சம் பரிசு என ஒரு தரப்பினர் அறிவிக்க, மற்றவர்கள் சூர்யாவிடம் ரூ.5 கோடி நஷ்டஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.

இதனால் சூர்யா ரசிகர்கள் WeStandwithSuriya என்ற ஹாஷ்டாக்கை உருவாக்கி, அதை டிரெண்டிங் ஆக்கினர். இதனால் சூர்யாவிற்கு ரசிகர்களிடம் ஆதரவு பெருகிறது

ஜெய்பீம் விவகாரம் தற்போது அரசியல் பிரச்சனையாக மாறி உள்ளது. ஆனால் இதுவரை டைரக்டர் பா.ரஞ்சித், நடிகை ரோகினி உள்ளிட்டோர் தவிர திரையுலகை சேர்ந்த எவரும் இதுவரை சூர்யாவிற்கு ஆதரவாக குரல் கொடுக்கவில்லை.

இதை ஏன் என நெட்டிசன்கள் கேள்வி கேட்டுள்ளனர். இவ்வளவு பெரிய பிரச்சனை நடந்து கொண்டிருக்கும் போது திரையுலகினர் மிக்சர் சாப்பிட்டுகிட்டு இருக்காங்களா என கேட்டு வறுத்தெடுத்து வருகிறார்கள்.

இந்நிலையில் சூர்யாவிற்கு ஆதரவாக தென்னிந்திய திரைப்பட வர்த்தக சங்கத்தினர், சம்பந்தப்பட்ட அரசியல் கட்சிகளிடம் பேச துவங்கி உள்ளது.

இருந்தும் திரையுலகினர் இதை கண்டுகொள்ளாமல் அவரவர் வேலைகளை பார்த்துக் கொண்டிருப்பது ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published.