முதன் முறையாக விண்வெளிக்கே நேரடியாக சென்று படப்பிடிப்பை எடுத்து திரும்பிய சம்பவம் பாராட்டுக்களை பெற்று வருகிறது.
ரஷ்யாவின் புகழ் பெற்ற இயக்குனர்களில் ஒருவர் கிளிம் ஷிபென்கோ, இவர் தனது திரைப்படத்தை செட் ஏதும் போடாமல் நேரடியாக விண்வெளிக்கு சென்று படமாக்க இருக்கிறார்.
மேலும், சுற்றுப்பாதையில் படமாக்கப்படும் முதல் திரைப்படம் இதுவாகும். இந்த படத்திற்கு தி சேலஞ்ச் என பெயரிடப்பட்டிருக்கிறது.
இந்த படத்தின் கதை அம்சம் குறித்து பார்க்கையில் இது விண்வெளி ஏற்படும் மருத்துவ நெருக்கடியை மையமாக வைத்து இருக்கும் என கூறப்படுகிறது.
இந்த படமானது, 12 நாட்கள் தங்கியிருந்து அங்கு படப்பிடிப்பை நடத்தியுள்ளனர். விண்வெளியில் படப்பிடிப்பு நிகழ்த்தப்பட்ட முதல் திரைப்படம் இதுவாகும்.
மேலும், இந்த படத்தில் நடித்த நடிகையான பெரெசில்ட், இந்த படத்திற்காக 3000 விண்ணப்பதாரர்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர். இவர் காப்ஸ்யூலில் இருந்து கைதட்டல் மற்றும் பூங்கொத்துடன் வெளியே வந்தார்.
நடித்த அனுபவத்தை பகிர்ந்த இவர், விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து வெளியே வருவது வருத்தமாக இருப்பதாக நடிகை குறிப்பிட்டார்.
12 நாட்கள் அதிகம் என்று முன்னதாக தோன்றியது ஆனால் இந்த நாட்கள் முடிந்ததும் வெளியே வருவதற்கு மனமே இல்லை என ரஷ்ய தொலைக்காட்சிக்கு கூறினார். வாழ்க்கையின் ஒரு முறை அனுபவம் என அவர் குறிப்பிட்டார்.
Oleg @novitskiy_iss and spaceflight participants Klim #Shipenko & Yulia #Peresild arrived in Star City, where they will undergo a medical examination, perform a program of post-flight scientific experiments and rehabilitation! Check out how many people are willing to meet them!🥳 pic.twitter.com/31QTBQGFrK
— GLAVKOSMOS (@glavkosmosJSC) October 17, 2021