பிறந்தநாள் கொண்டாட்ட வீடியோவை வெளியிட்ட சீரியல் நடிகர் செந்தில்- ஜோடியாக அவர் போட்ட பதிவு

விஜய் தொலைக்காட்சியில் குடும்ப பாங்கான கதைக்களத்தில் ஓடிக் கொண்டிருக்கும் சீரியல்களில் ஒன்று நாம் இருவர் நமக்கு இருவர்.

கொரோனாவிற்கு பின் அதே பெயரில் புதிய கதைக்களத்தில் சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த புதிய கதையும் மக்களிடம் எப்போதோ ரீச் ஆகிவிட்டது. சீரியலில் காமெடியிலும், கெத்து காட்டுவதிலும் மாஸாக நடித்து வருபவர் செந்தில். மாயன் என்ற பெயரில் இவரது கதாபாத்திரத்திற்கு இருக்கும் கெத்தை ரசிகர்கள் ரசிக்கிறார்கள். தற்போது செந்தில் தனது பிறந்தநாளை மனைவியுடன் சூப்பராக கொண்டாடியுள்ளார். பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோவை தனது யூடியூப் பக்கத்திலும், மனைவியுடன் எடுத்த அழகிய புகைப்படத்தை தனது இன்ஸ்டாவிலும் பதிவு செய்துள்ளார்.

 

 

View this post on Instagram

 

Leave a Reply

Your email address will not be published.