18 முதல் 64 வயதுக்குட்பட்டவர்களுக்கு, சாதாரண காச்சல் தடிமன் போன்ற நோய்கள் இல்லாதவர்களுக்கு கொரோனா தடுப்பூசியின் புதிய பூஸ்டர் டோஸ் வழங்கப்பட வேண்டும் என நோர்வே அரசு முடிவு செய்துள்ளது.
கொரோனா தொற்றுநோயைக் கையாள்வதில் தடுப்பூசியே இன்னும் மையமாகவும் முக்கியமாகவும் உள்ளது என்று சுகாதார மற்றும் பராமரிப்பு அமைச்சர் Ingvild Kjerkol தெரிவித்துள்ளார்.
முன்னர் 64 வயதுக்கு மேற்படடவர்களுக்கும், ஆபத்தான கடும் நோய்க்கு உள்ளானவர்களுக்கும் தடுப்பூசி புதிய பூஸ்டர் டோஸ் வழங்கப்பட்டு வந்தது.
தற்போது 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு புதிய புதுப்பிப்பு ஊசி வழங்குகிறோம். அதிகமான மக்களுக்கு தடுப்பூசிகளை வழங்குவதன் மூலம், எதிர்காலத்தில் நோய்த்தொற்று நிலைமை மோசமடைந்தால் அதனை நாங்கள் சிறப்பாக எதிர்கொள்ளலாம். கோவிட்-19 தடுப்பூசிகள் கடுமையான நோய்களுக்கு எதிராக நீண்ட காலத்திற்கு நன்கு பாதுகாக்கின்றன என சுகாதார அமைச்சர் Ingvild Kjerkol தெரிவித்துள்ளார்.
FHI நோர்வே சுகாதார திணைக்களத்தின் பரிந்துரைகளின் அடிப்படையிலேயே அரசாங்கம் இம்முடிவினை எடுக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி சலுகை சுகாதாரப் பணியாளர்களுக்கும் பொருந்தும்.
தடுப்பூசி சலுகையை ஏற்பாடு செய்வது நகராட்சிகள் தான். எனவே இதற்கான பணிகளை நகராட்சிகள் மேற்கொள்ளும் என FHI சுகாதார மையம் தெரிவிக்கிறது.