அமெரிக்காவில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா

அமெரிக்காவில் நாள்தோறும் லட்சக்கணக்கானோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை இதுவரை இல்லாத அளவிற்கு அதிகரித்துள்ளது. அமெரிக்காவில் கடந்த டிசம்பர் மாதத்தின் 2- வது வாரத்திலிருந்தே கொரோனா தொற்று பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகின்றது.

கடந்த 3 வாரங்களில் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவோர் எண்ணிக்கை இரட்டிப்பாகி உள்ளது. 2- வது அலையின் போது கடந்த ஜனவரி மாதம் அதிகபட்சமாக 1,32,051 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், தற்போது 1,32,646 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

எனினும் 10% நோயாளிகளை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், 5% பேருக்கு மட்டுமே வெண்டிலேட்டர் சிகிச்சை தேவைப்படுவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அடுத்த 2 அல்லது 3 வாரங்களில் அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு உச்சம் தொட வாய்ப்புள்ளதாகவும் மருத்துவர்கள் கணித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE