
நீண்ட நாட்களாக ஒரு பெரிய வெற்றிப் படத்திற்கு காத்துக் கொண்டிருந்த சிம்புவுக்கு வரப்பிரசாதமாக அமைந்ததுதான் வெங்கட்பிரபுவின் மாநாடு திரைப்படம். இப்படம் மெஹா ஹெட் அடித்துள்ளது.
இதனால் கடந்த பத்து வருடங்களாக இழந்த தன்னுடைய மார்க்கெட்டை ஒரே படத்தில் தூக்கி நிறுத்திவிட்டார் நடிகர் சிம்பு. ‘மாநாடு’ படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
தமிழ் சினிமாவில் உள்ள அனைத்து நடிகர், நடிகைகளும் அந்தப் படத்தை புகழ்ந்து பேசி வருகிறார்கள்.
அந்த வகையில் சமீபத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் ‘மாநாடு’ படத்தை பார்த்துவிட்டு தனக்கு மிகவும் பிடித்ததாக சிம்புவை குறிப்பிட்டு ஒரு பதிவு போட்டுள்ளார்.
அதற்கு சிம்புவும் நன்றி தெரிவித்து ஒரு பதிவை வெளியிட்டார்.
இதற்கு நன்றி செலுத்தும் விதமாக ஒரு ஹார்ட் ஒன்றை போட்டுள்ளார் நடிகை கீர்த்தி சுரேஷ். இதைப் பார்த்த நெட்டிசன்கள் கீர்த்தி சுரேஷ் மற்றும் சிம்பு ஆகிய இருவரும் காதலிப்பதாக ஒரு வதந்தியை கிளப்பிவிட்டுவிட்டுள்ளனர்.
இந்தச் செய்தி தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
Thank you @KeerthyOfficial
https://t.co/dTU9dSMMDI
— Silambarasan TR (@SilambarasanTR_) December 2, 2021