ஆப்கானில் ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக 10 லட்ச குழந்தைகள் இறக்கும் தருவாயில் உள்ளதாக ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் நிதியம் தெரிவித்துள்ளது.
மேலும் நாட்டில் சுமார் ஒரு கோடியே நாற்பது லட்ச மக்கள் கடக்கும் பட்டினியால் அவதிப்படுவதாகவும்,30 லட்ச மக்கள் ஊட்டச்சத்து குறைபாட்டோடு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஆயிரக்கணக்கான ஆப்கானிய குழந்தைகள் அபாயகரமான வேலைகளில் ஈடுபட வேண்டிய கட்டாயத்தில் உள்ளதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.