ஒரு எபிசோடுக்கு இவ்ளோ சம்பளம்மா …!பிரியங்காவின் சம்பளத்தை தாண்டியது ..!

பிரபல தொகுப்பாளரான மாகாபா ஆனந்தின் சம்பள விடயம் குறித்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

ரேடியோ ஜாக்கியாக தனது தொழில் வாழ்க்கையை துவங்கிய மாகாபா ஆனந்த் ரேடியோ மிர்ச்சியில் 6 ஆண்டுகள் பணியாற்றி உள்ளார்.

இவர் அறிமுக இணை தொகுப்பாளர் பிரியங்கா தேஷ்பாண்டேவுடன் இணைந்து “சினிமா காரம் காபி” நிகழ்ச்சிக்காக விஜய் டிவியில் வீடியோ ஜாக்கியாக அறிமுகமானார்.

இதனை தொடர்ந்து நவரச திலகம், கடலை, அட்டி, மீசையை முறுக்கு, பஞ்சுமிட்டாய், மாணிக் உள்ளிட்டவற்றில் நடித்துள்ளார்.

சூப்பர் சிங்கர் ஜூனியர், சூப்பர் சிங்கர், சூப்பர் சிங்கர் டி20, கிங்ஸ் ஆஃப் டான்ஸ், மிஸஸ் சின்னத்திரை, மிஸ்டர் அன்ட் மிஸ்ஸஸ், தி வால், முரட்டு சிங்கிள்ஸ், ராமர் வீடு உள்ளிட்டவற்றை தொகுத்து வழங்கி இருக்கிறார்.

பிரியங்கா தேஷ்பாண்டே பிக்பாஸில் பங்கேற்றுள்ள நிலையில் அவர் தொகுத்து வழங்கி வந்த ஸ்டார்ட் மியூசிக்கையும் தற்போது மாகாபா ஆனந்தே தொகுத்து வழங்கி வருகிறார்.

இதனிடையே மாகாபா ஆனந்த், தொகுப்பாளராக 1 எபிசோடிற்கு வாங்கி வரும் சம்பளம் ரூ.1 லட்சம் என்ற தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது.

பிரியங்காவின் நிகழ்ச்சிகளை மட்டும் இல்லை சம்பள விடயத்திலும் அவர் இடத்தை மா கா பிடித்து விட்டாராம். இதனை கேள்விப்பட்ட அவரது ரசிகர்கள் மாகாபாவை பாராட்டி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE