நம்மில் பலருக்கு பழங்கள் சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிக்கும் பழக்கம் இக்கின்றது.
இன்று முதல் இந்த பழக்கத்தை உடனே நிறுத்துங்கள். இல்லை என்றால் பல்வேறு ஆபத்துக்களை சந்திக்க நேரிடும்.
குறிப்பாக பழங்கள் சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடுத்தால் என்ன நடக்கும் என்பது குறித்து பார்க்கலாம்.பழங்களில் தாதுக்கள், விட்டமின்கள் இருப்பது போல ஈஸ்ட் பொருட்கள் உள்ளன.
எனவே நீங்கள் பழங்களை சாப்பிட்டதும் தண்ணீர் குடிக்கும் போது அது வயிற்று அமிலங்களை நீர்த்துப் போக செய்து விடும்.
இதனால் குடலில் பாக்டீரியாக்கள் பெருகி கார்பன் டை ஆக்சைடு மற்றும் ஆல்கஹாலை உற்பத்தி செய்யும்.
இதுவே வாயுத் தொல்லைக்கு காரணமாக அமைந்து விடுகிறது.
உடலில் உள்ள அமிலங்கள் தூண்டப்படுகிற பொழுது அதிலிருந்து உடலுக்குக் கேடு செய்யும் பாக்டீரியாக்களின் உற்பத்தியும் பெருக்கமும் அதிகமாகிவிடும்.
அது வயிற்றுத் தசைகளை இறுக்கிப் பிடிக்கவும் வயிற்று வலியையும் ஏற்படுத்தி விடும்.தர்பூசணி, வெள்ளரிக்காய், முலாம் பழம், ஆரஞ்சு, ஸ்ட்ராபெர்ரி போன்ற பழங்களை சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிப்பது வயிற்றின் அமில கார சமநிலையை பாதிக்கிறது.
பீச் (pH) அளவு மாறுகிறது.அதிகப்படியான நீரால் வயிற்றின் அமிலத்தன்மை குறையும். இதனால் வயிற்று அமிலம் குறைந்து சரியாக சீரணிப்பு நடக்காது. இனியாவது பழங்கள் சாப்பிட்டால் ஒரு மணி நேரத்துக்கு பிறகு தண்ணீர் குடியுங்கள்.
இல்லை இது போன்ற ஆபத்துக்களை சந்திக்க நேரிடும்.