நைஜீரியாவில் 30 கல்லூரி மாணவர்களை பயங்கரவாதிகள் கடத்திருந்த நிலையில் நான்கு மாதங்களுக்கு பின் நேற்று அவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
நைஜீரியாவில் உள்ள கெப்பி மாகாணத்தில் பள்ளி ஒன்றில் இருந்து நான்கு மாதங்களுக்கு முன் பயங்கரவாதிகள் துப்பாக்கி முனையில், 70 மாணவர்களை கடத்திசென்றனர்.
பயங்கரவாதிகளால் கடத்தப்பட்டு அடுத்த சில நாட்களில் ஆறு மாணவர்கள் மீட்கப்பட்டனர். இதேவேளை ஒரு மாணவரை பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றனர். கடத்தப்பட்டவர்களை மீட்கும் பணி தொடர்ந்தது. இந்நிலையில் நேற்று 30 மாணவர்கள் விடுவிக்கப்பட்டனர். இருப்பினும் மாணவர்கள் எவ்வாறு மீட்கப்படனர் என்ற விபரத்தை அரசு இதுவரையில் வெளியிடவில்லை. மீதமுள்ள மாணவர்களை மீட்கும் பணி தொடர்வதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. நடப்பு ஆண்டில் (2021) மாத்திரம் நைஜீரியாவில் 1,400 மாணவர்கள் கடத்தப்பட்டுள்ளனர். அதில் 200 பேர் இன்னும் விடுவிக்கப்படவில்லை’ என, யுனிசெப் தொண்டு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.