ஒன்றாரியோவில் கொரோனா கட்டுப்பாடுகளில் மேலும் சில தளர்வுகள்!

ஒன்றாரியோ மாகாணத்தில் மேலும் கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட உள்ளதாக அறிவிக்கப்படுகின்றது. ஒன்றாரியோவில் உணவகம், உடபயிற்சி நிலையங்கள் போன்றவற்றின் வாடிக்கையாளர் எண்ணிக்கை வரையறுக்கப்பட்டுள்ளது.

கொரோனா பெருந்தொற்று பரவுகையை கட்டுப்படுத்தும் நோக்கில் இ வ்வாறு வரையறைகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் கட்டுபாடுகளை தளர்த்துவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உணவகம், உடபயிற்சி நிலையம் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கையை தளர்த்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எதிர்வரும் வாரமளவில் இந்த கட்டுபாடுகள் தளர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முகக் கவசங்கள் அணிவது தொடர்பிலும் பேச்சுவார்த்தைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இன்னும் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது. முக்க் கவச பயன்பாடு குறித்து மாறுபட்ட கருத்துக்கள் வெளியிடப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published.