ஐரோப்பாவிலேயே புகலிடக்கோரிக்கையாளர்களுக்கு புகலிடம் வழங்குவதில் ஜேர்மனிதான் இப்போதும் முதலிடத்தில் உள்ளது.
அதிகம் பேர் புகலிடம் தேடும் ஒரு நாடாக ஜேர்மனி நீடிக்கும் நிலையில், 2021இல் ஜேர்மனியில் புகலிடம் கோரியவர்களின் எண்ணிக்கை ஏற்கனவே 100,000ஐ தாண்டியாயிற்று.
ஜேர்மனியின் புலம்பெயர்தல் மற்றும் அகதிகளுக்கான பெடரல் அலுவலகம், செப்டம்பர் இறுதிவாக்கில் 100,278 ஆரம்ப கட்ட புகலிடக்கோரிக்கை விண்ணப்பங்களைப் பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளது.