தண்ணீர் என்றாலே பயம்! சுமார் 65 ஆண்டுகளாக குளிக்காத விசித்திர மனிதர்..!

நீங்கள் பல ஆச்சரியமான விஷயங்களை கேள்விப்பட்டு இருப்பிங்க. ஆனால் இப்படி ஒரு விஷயத்தைக் கேட்டிருக்கவே முடியாது.

ஈரானில் வசிக்கும் அமோ ஹாஜி, கடந்த 65 ஆண்டுகளாக குளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

ஏனெனில் அவர் தண்ணீரைக் கண்டால் அச்சம். குளித்தால் அவருக்கு நோய் வந்துவிடும் என்று பயப்படுகிறாராம். 83 வயதான அமோ 65 ஆண்டுகளாக தனது உடலில் ஒரு சொட்டு நீர் கூட படாமல் உலகிலேயே அழுக்கான மனிதராக திகழ்கிறார்.

இருப்பினும் அவர் சுறுசுறுப்பாகவும், ஆரோக்கியமாகவும் உள்ளார் என்பது அனைவருக்கும் ஆச்சரியமாக உள்ளது.

இவருக்கு இறந்த விலங்குகளின் அழுகிய இறைச்சியை சாப்பிடுவதே அவருக்கு பிடிக்குமாம்.

அசைவ உணவையே விரும்பி சாப்பிடும் அமாவு அழுகிய உள்நாட்டு கீரைகள் மற்றும் காய்கறி உணவுகளையும் விரும்புகிறார்.

அவருக்கு சொந்தமாக வீடு கூட இல்லை.

அவர் தனது கிராமத்திலிருந்து வெகு தொலைவில் இருக்கும் வெட்டவெளியில் வசிக்கிறார்.
அமாவுக்கு சிகரெட் புகைப்பது மிகவும் பிடிக்குமாம்.

கிராமவாசிகள் அழுக்கு மனிதருக்கு கொடுக்கும் சிகரெட்டுகள் முடிந்துவிட்டால் என்ன செய்வார் தெரியுமா?

தனது சிகரெட் பைப்பில் விலங்குகளின் உலர்ந்த மலத்தை போட்டு புகைப்பாராம்.

இந்த உலகின் அனைத்து வசதிகளையும் துறந்துவிட்டு இப்படி வாழ்வது தான் தனக்கு பிடித்திருப்பதாக உலகின் அழுக்கு மனிதர் கூறுகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE