ஆல்பர்ட்டா மாகாணத்தில் 52 பள்ளிகளில் கொரோனா பரவல் தீவிரமென கண்டறியப்பட்ட நிலையில், மேலும் 700 பள்ளிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
கனடாவின் ஆல்பர்ட்டாவில் கொரோனா நான்காவது அலையின் தாக்கம் பள்ளிகளில் காணப்படுவதாக தெரிய வந்துள்ளது. இதனால் மாணவர்கள் கொரோனா பாதிப்பால் அவதிப்பட்டு வருவதுடன், குடும்ப உறுப்பினர்களும் அவர்களால் பாதிக்கப்படுவதாக தெரிய வந்துள்ளது. ஆல்பர்ட்டா சுகாதாரத்துறை வெளியிட்ட பட்டியலில், மொத்தம் 54 பள்ளிகளில் கொரோனா பரவல் உச்சம் கண்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. அதாவது 10கும் மேற்பட்ட மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
மத்திய மண்டலத்தில் 21 பள்ளிகளும் கல்கரி மண்டலத்தில் 11 பள்ளிகளும் வடக்கு மண்டலத்தில் 11 பள்ளிகளும் எட்மண்டன் மண்டலத்தில் 10 பள்ளிகளும் தென் மண்டலத்தில் ஒரு பள்ளியும் கொரோனா பாதிப்புக்கு உள்ளானதாக தெரிய வந்துள்ளது. மேலும், 702 பள்ளிகளுக்கு கொரோனா பரவல் தொடர்பில் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. இந்த 702 பள்ளிகளில் 490 பள்ளிகளில் 2 அல்லது 4 பேர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 212 பள்ளிகளில் 5ல் இருந்து 9 பேர்களுக்கு கொரோனா உறுதி செய்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது.