இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள இந்திய இராணுவத் தளபதி

இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் மனோஜ் முகுந்த் நரவனே (Manoj Mukund Naravane), நாளைய தினம் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.

இலங்கையின் பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும், இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வாவின் வேண்டுகோளை ஏற்று இந்திய இராணுவத் தளபதி இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளதாக தெரியவருகிறது.

இந்திய இராணுவத் தளபதியின் விஜயத்தின் போது அவர் இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச (Gotabaya Rajapaksa), இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ச (Mahinda Rajapaksa) மற்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஆகியோரையும் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார். இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வாவின் பங்கேற்புடன் ஸ்ரீ ஜயவர்தனபுர இராணுவ தலைமையகத்தில் எதிர்வரும் புதன்கிழமை நடைபெறவுள்ள ஊடகவியலாளர் சந்திப்பிலும் அவர் கலந்து கொள்ளவுள்ளதாக தெரியவருகிறது.

அத்துடன் இந்தியப் படையினரின் பங்கேற்புடன் நடைபெற்று வருகின்ற ‘மித்ர சக்தி’ இராணுவக் கூட்டுப் பயிற்சிகளின் இறுதிக்கட்ட நிகழ்வுகளையும் அவர் பார்வையிடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE