(Norway)நோர்வேயின் வான் பரப்பில் இனம் தெரியா பலூன்கள் பறந்தன.

நோர்வேயின் வான் பரப்பில் தெரியாத பலூன்கள் உள்ளன என்று நோர்வேயின் பாதுகாப்பு அமைச்சர் Bjørn Arild Gram (Sp) கூறுயுள்ளார்.
நோர்வேயின் வான் பரப்பில் அறியப்படாத பலூன்கள் காணப்பட்டன. ஒவ்வொரு நாளும் பல்வேறு நாடுகளில் இருந்து ஏராளமான வானிலை பலூன்கள் வெளியிடப்படுகின்றன, ஆனால் அவற்றில் பெரும்பாலானவை ஒன்று முதல் இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு வெடித்து கீழே விழுகின்றன என்று அவர் கூறியுளார்.
நமக்குத் தெரியாத பலூன்கள் நோர்வேயின் நிலப்பரப்பில் காற்றுடன் நகர்வது அவ்வப்போது நிகழ்கிறது என்றும் Bjørn Arild Gram கூறியுளார்.
அண்மை நாட்களாக அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளின் வான் பரப்பிலும் இனம் தெரியா பலூன்கள் பறந்தன என்றும் செய்திகள் கூறுகின்றன. அவை வேற்று நாடுகளின் உளவு பார்க்கும் கருவிகளாக இருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டு, சுட்டு வீழ்த்தப்படடன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE