
தனது உடலின் 99 சதவீத பாகங்களை டாட்டூ போட்டும், உடலியல் மாற்றங்கள் செய்தும் மாற்றிய பெண் மரியா ஜோஸ் கிறிஸ்டெர்னா, தன்னை மக்கள் காட்டேரியாக அழைப்பதாக வருத்தத்துடன் கூறினார்.
மெக்சிகோ நாட்டைச் சேர்ந்த மரியா ஜோஸ் கிறிஸ்டெர்னா என்ற பெண், தனது 14 வயதில் இருந்தே தன்னுடைய உடலில் விதவிதமான வடிவங்களில் பச்சைக் (டாட்டூ) குத்திக் கொண்டு வந்துள்ளார். தற்போது பல வர்ணங்களில் டாட்டூ குத்தப்படுவது பேஷனாக மாறியுள்ளதால், அதன்மேல் காதல் கொண்ட மரியா ஜோஸ் கிறிஸ்டெர்னா தனது உடல் முழுவதும் கிட்டத்தட்ட 99 சதவீத பாகங்களில் டாட்டூ குத்தியுள்ளார்.
மேலும் அவரது நெற்றி, கைகள் போன்ற உடலின் மற்ற பாகங்களில் ஒருவகை மருந்தை பயன்படுத்தி துளையிடுவதும், வெட்டிவிடுவதும், உப்பவிடுவதுமாக பலவகைகளில் தனது உடலமைப்பை மாற்றிக் கொண்டுள்ளார்.
கிட்டத்தட்ட தனது உடலில் 49 வகையான மாற்றங்களை செய்துள்ளார். அதீத தோற்றம் கொண்ட அவர் உடலில் அதிக மாற்றங்களை கொண்ட பெண் என்ற சாதனையை பெற்றுள்ளார். இதுகுறித்து அவர் கின்னஸ் உலக சாதனைக்கான யூடியூப் சேனலில் பேசுகையில், ‘உலகில் அதிக உடல் மாற்றங்களைக் கொண்ட பெண் என்ற அதிகாரப்பூர்வ சாதனையைப் பெற்றுள்ளேன்.
ஆனால், என்னை ‘காட்டேரி பெண்’ என்று அழைக்கின்றனர். என்னை பின்பற்றுபவர்கள் கவனமாக செயல்பட வேண்டும். இல்லை என்றால், டாட்டூவால் ஆபத்துகளும் ஏற்படலாம். டாட்டூ குத்திக் கொள்வது தற்போது இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. நாகரீகமாக மாறிவிட்டதால், பலரும் டாட்டூ போட்டுக் கொள்கின்றனர்’ என்றார்.