நாட்டில் தற்போது கொரோனா வைரஸைத் தவிர மேலுமொரு புதிய வைரஸ் பரவி வருவதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தற்போது நாட்டில் பல வைரஸ்கள் பரவி வருவதாகவும், கொவிட்-19 உடன், அதேபோன்ற ஒரு வைரஸும், டெங்கு வைரஸும் அதிகரித்து வருவதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்க உறுப்பினர் வைத்தியர் அபிரசாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.
புதிய வைரஸ் பரவல் காரணமாக நாடு பாரதூரமான சூழலை நோக்கிச் சென்றுகொண்டிருப்பதாக அவர் மேலும் கூறியுள்ளார்.
இதற்கிடையில், ஒமிக்ரோன் மாறுபாடு அல்லது கொரோனா வைரஸின் பிற புதிய வகைகளை நிவர்த்தி செய்ய எடுக்கப்பட வேண்டிய தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம், ஜனாதிபதி, சுகாதார அமைச்சகம் மற்றும் சுகாதார அதிகாரிகளுக்கு இடைக்கால அறிக்கை ஒன்று சமர்ப்பிக்கவுள்ளது.
சிறப்பு மருத்துவர்கள், பொது சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த சுகாதார நிபுணர்கள் அடங்கிய 12 பேர் கொண்ட குழுவினரால் இந்த அறிக்கை தொகுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.