நியூசிலாந்தையும் ஓட ஓட அடித்த பாகிஸ்தான்! அபார வெற்றி: அரையிறுதிக்கு பிரகாச வாய்ப்பு

நியூசிலாந்து அணிக்கெதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று அரையிறுதி வாய்ப்பை பிரகாசப்படுத்திக் கொண்டுள்ளது.

உலகக்கோப்பை டி20 தொடரின் சூப்பர் 12 போட்டியின் இன்றைய ஆட்டத்தில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின.

இதில் முதலில் ஆடிய நியூசிலாந்து அணியில் துவக்க வீரரான மார்டின் கப்டில்(17), டேரி மிட்சல்(27), கானே வில்லியம்சன்(25), ஜேம்ஸ் நீச்சம்(1)டிவோன் கான்வே(27) எடுத்து வெளியேறினர்.இவர்களைத் தொடர்ந்து வந்த மற்ற வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் அவுட் ஆகியதால், நியூசிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 134 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது. பாகிஸ்தான் அணியில் அதிகபட்சமாக ஹரீஷ் ராப் 4 ஓவரில் 22 ஓட்டங்கள் விட்டுக் கொடுத்து, 4 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.இந்திய அணிக்கு எதிரான கடந்த போட்டியில் 150 ஓட்டங்களை பாகிஸ்தான் அணி அசால்ட்டாக எட்டிப் பிடித்ததால், இந்த முறையும் இந்த இலக்கை எட்டிவிடும் என்று நினைத்த போது, துவக்க வீரரான பாபர் அசாம் 9 ஓட்டங்களில் வெளியேறி அதிர்ச்சி கொடுத்தார்.அதன் பின் வந்த பாகர் ஜமான் 11 ஓட்டங்களில் வெளியேற, மற்றொரு துவக்க வீரர் மொகமது ரிஷ்வான் ஆட்டத்தைக் கையில் எடுத்துக் கொண்டார்.

 

அதிரடியாக விளையாடிய இவர் 33 ஓட்டங்களி, இஷ் சோதி பந்து வீச்சில் ஆட்டமிழக்க, ஆட்டம் மீண்டும் சூடுபிடித்தது. ஆனால், சோயிப் மாலிக் ஒரு புறம் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்ததால், பாகிஸ்தான் அணியின் ரன் விகிதம் சீரான் வேகத்தில் சென்றது.கடைசி கட்டத்தில் அசிப் அலில் 12 பந்தில் 27 ஓட்டங்கள் குவிக்க இறுதியாக பாகிஸ்தான் அணி 18.4 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 135 ஓட்டங்கள் எடுத்து 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் பாகிஸ்தான் அணி இரண்டு வெற்றிகளை பதிவு செய்துள்ளது. இதன் மூலம் கிட்டத்தட்ட தன்னுடைய அரையிறுதி வாய்ப்பை பிரகாசப்படுத்திக் கொண்டுள்ளது.அடுத்து பாகிஸ்தான் மோதவுள்ள அணிகள் ஆப்கானிஸ்தான், ஸ்காட்காலந்து, நமீபியா என்பதால், நிச்சயமாக பாகிஸ்தான் இந்த முறை அரையிறுக்கு செல்வது உறுதி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE