இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிக்கெதிரான போட்டியின் மூலம் விளையாட்டின் சகோதரத்துவத்தை பார்க்க முடிந்ததாக கூறியுள்ளார்.
டி20 உலகக்கோப்பை தொடரின் நேற்று முன் தினம் நடைபெற்ற இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கிடையேயான போட்டியில், பாகிஸ்தான் அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்த வெற்றியை பாகிஸ்தான் ரசிகர்கள் உற்சாகமாக இப்போது வரை கொண்டாடி வருகின்றனர். ஆனால் பாகிஸ்தான் அணியின் கேப்டன் ஆன பாபர் அசாம் நாம் இந்தியாவை வீழ்த்த வரவில்லை, உலகக்கோப்பை வெல்ல வந்திருக்கிறோம். அதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள் என்று கூறியிருந்தார்.இந்நிலையில், பாகிஸ்தான் அணியின் பேட்டிங் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ள ஹைடன் இந்த போட்டி குறித்து கூறுகையில், இந்தியாவை வீழ்த்திய பின்பு, நான் அங்கு கண்ட சகோதரத்துவத்தால் ஈர்க்கப்பட்டேன் என்று கூறியுள்ளார்.
மேலும், பாகிஸ்தான் மற்றும் இந்திய வீரர்கள் நடந்து கொண்ட விதம், ஒருவரையொருவர் மனிதர்களாக எப்படி நடத்த வேண்டும் என்பதற்கான சிறந்த உதாரணமாக இருந்தது. குறிப்பாக போட்டிக்கு பின், டோனி பாகிஸ்தான் அணி வீரர்களுடன் பேசிக் கொண்டிருந்த அந்த தருணம் பார்ப்பதற்கே மிகவும் அழகாக இருக்கிறது.அதே போன்று இந்திய அணி தோல்வியடைந்த பின்பு, கோலி பாகிஸ்தான் துவக்க வீரர்களை பாராட்டி தட்டிக் கொடுத்தது, உங்களுக்கே தெரியும். போட்டி முடிந்து பாகிஸ்தான் வீரர்கள் அறைக்கு திரும்பிய போது, அவர்களிடம் மிகுந்த பணிவு இருந்தது. அதிகமாக கொண்டாட்டங்கள் இல்லை. இந்த பணிவு ஒரு சிறந்த வெளிப்பாடு என்று கூறினார்.