சாதிய ரீதியான வார்த்தைகளை பயன்படுத்தியதாக எழுந்த குற்றச்சாட்டில் யுவராஜ் சிங் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
கடந்த பிப்ரவரி மாதத்தில், ஒரு குறிப்பிட்ட சாதியைக் குறித்து பேசியதற்காக யுவராஜ் சிங் மீது ஹரியானா போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
அப்போதே நான்கு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் நேற்று போலீஸார் கைது நடவடிக்கை மேற்கொண்டனர்.
கடந்த ஆண்டு ஜூன் மாதம் இன்ஸ்டாகிராம் லைவில் பேசிய யுவராஜ் சிங், சக கிரிக்கெட்டர் சாஹல் மீது சாதி ரீதியான வன்ம வார்த்தைகளை பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்நிலையில் முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங், கிரிக்கெட்டர் சாஹலுக்கு எதிராக சாதிய ரீதியிலான வன்ம வார்த்தைகளைப் பயன்படுத்தியதற்காக ஹன்சி போலீஸாரால் நேற்று கைது செய்யப்பட்டார்.
மூன்று மணிநேர விசாரணைக்குப் பிறகு, அவர் இடைக்கால ஜாமீனில் விடுவிக்கப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது. 153 A மற்றும் 505 ஆகிய சட்டப்பிரிவுகளின் கீழ் யுவராஜ் சிங்கின் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் தெரிய வந்துள்ளது.