கோலி தலைமையிலான பெங்களூரு அணி மொத்தமாக எத்தனை வெற்றிகளை பெற்றுள்ளது என்ற விபரம் வெளியாகியுள்ளது.
ஐபிஎல் தொடரின் நேற்றைய எலிமினேட்டர் போட்டியில் பெங்களூரு அணிக்கெதிரான போட்டியில், கொல்கத்தா அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த தோல்வியின் மூலம் பெங்களூரு அணி தொடரை விட்டு வெளியேறியது.
அதுமட்டுமின்றி கோலி இந்த ஐபிஎல் தொடரோடு தான் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்ததால், இந்த முறை நிச்சயமாக கோலிக்காகவது பெங்களூரு கோப்பையை கைப்பற்ற வேண்டும் என்று ரசிகர்கள் பலர் கடவுளை வேண்டினர்.ஆனால், இறுதியில் பெங்களூரு அணியால் இறுதிப் போட்டிக்கு கூட தகுதி பெற முடியாமல் போய்விட்டது.
இந்நிலையில், கோலி தலைமையிலான பெங்களூரு அணி இதுவரை எத்தனை வெற்றிகளை பெற்றுள்ளது என்ற விபரம் வெளியாகியுள்ளது.
அதன் படி, 140 போட்டிகளில் கேப்டனாக இருந்த கோலி, 64 போட்டிகளில் வெற்றியையும், 70 போட்டிகளில் தோல்வியும், 4 போட்டிகள் முடிவில்லாமலும், 3 போட்டிகள் டிராவும் ஆகியுள்ளது. இந்த புள்ளி விவரத்தை வைத்து பார்த்தால், தோல்வி சதவீதமமே அதிகமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.