
அரசாங்கத்தின் தன்னிச்சையான வரித் திருத்தம் மற்றும் நாட்டில் உள்ள வைத்தியசாலைகளில் மருந்துப் பற்றாக்குறைக்கு எதிர்ப்புத் தெரிவித்து பல தொழிற்சங்கங்கள் இன்று கொழும்பில் ஆர்ப்பாட்டமொன்றை ஏற்பாடு செய்துள்ளன.
அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைமையில் பல தொழிற்சங்கங்கள் மற்றும் சிவில் அமைப்புக்கள் இணைந்து இந்தப் போராட்டம் நடத்தப்படவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் வைத்தியர் சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.