
கஞ்சிபானி இம்ரான் மிகவும் திறமையானவர் என்றும் அவர் நல்ல புத்திசாலித்தனமும் அறிவும் கொண்டவர் என்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் மதுர விதானகே தெரிவித்துள்ளார்.
இவ்வளவு புலனாய்வு அமைப்புகள் இயங்கும் நாட்டில் கஞ்சிபானி இம்ரான் தப்பிச் சென்றிருந்தால், கஞ்சிபானியை பிடிக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும், அதற்கு காரணமான புலனாய்வு அமைப்புகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
பாராளுமன்றத்தில் இடம்பெற்ற விவாதத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்திருந்தார்.