பிரிட்டன் பிரதமரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலில் வெளியுறவுத்துறை அமைச்சர் லிஸ் டிரஸ் வெற்றி பெற அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
ஐரோப்பிய நாடான பிரிட்டனின் பிரதமர் பதவியில் இருந்து போரிஸ் ஜான்சன் சமீபத்தில் விலகினார்.ஆளும் பழமைவாத கட்சியின் தலைவராக உள்ளவரே, பிரதமர் பதவியை வகிக்க முடியும். இதன்படி, கட்சித் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் கடந்த மாதம் துவங்கி பல கட்டங்களாக நடந்து வந்தது.
இத்தேர்தலில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரானமுன்னாள் நிதி அமைச்சர் ரிஷி சுனக், வெளியுறவு அமைச்சர் லிஸ்டிரஸ் இடையே போட்டிநிலவுகிறது. தலைவர் பதவிக்கான தேர்தலில் 2 லட்சம் உறுப்பினர்கள் ஓட்டளித்தனர். இந்த ஓட்டுப்பதிவு பிரிட்டன் நேரப்படி நேற்று மாலை 5:00 மணிக்கு முடிவடைந்தது.
நாளை மறுநாள் தேர்தல் முடிவு வெளியாக உள்ளது.கட்சிக்குள் லிஸ்டிரஸ்க்கு அதிக ஆதரவு இருப்பதாக தெரிகிறது. எனவே, அடுத்த பிரதமராக லிஸ் டிரஸ் தேர்வாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.