‘நெட்டிசன்’களிடம் தொடர்ந்து வாங்கிக் கட்டிக்கொண்டிருக்கிறார் விஜய் மல்லையா

விநாயகர் சதுர்த்தி அன்று வாழ்த்து சொல்லி, ‘டுவீட்’ போட்டு, இப்போது, ‘நெட்டிசன்’களிடம் தொடர்ந்து வாங்கிக் கட்டிக்கொண்டிருக்கிறார் விஜய் மல்லையா.நாட்டை விட்டு ஓடிப்போன தொழிலதிபர் விஜய் மல்லையா, விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, அனைவருக்கும் ‘கணேஷ் சதுர்த்தி வாழ்த்துகள்’ என டுவிட்டரில் தன் வாழ்த்தை தெரிவித்திருந்தார்.

விஜய் மல்லையாவின் வாழ்த்தைப் பார்த்து பலர் கடுப்பாகி, அவரை ‘தாளித்து’ எடுத்து வருகின்றனர். அவரது டுவீட்டுக்கு பதிலடியாக, ‘எப்போது இந்தியாவுக்கு வந்து வாழ்த்து சொல்லப்போகிறீர்கள்?’ என பலர் பதிவிட்டு
உள்ளனர். சிலர், ‘வங்கி விடுமுறை தினம் என்பதால் வாழ்த்தை தைரியமாக போட்டிருக்கிறீர்களா?’ என கேட்டுஉள்ளனர்.

இதற்கு முன்னும் பல்வேறு பண்டிகைகளை ஒட்டி, அவரை ‘பாலோ’ செய்பவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்து வந்துள்ளார் என்றாலும், இம்முறை கடுமையான விமர்சனத்துக்கு ஆளாகி உள்ளார். நெட்டிசன்கள் அவரை வறுத்தெடுத்து
வருகின்றனர்.

ஒரு காலத்தில் ‘ஓஹோ’வென இருந்து, பின் 9,000 கோடி ரூபாய் கடன் மோசடியில் சிக்கி, 2016ல் நாட்டை விட்டு பிரிட்டனுக்கு பறந்துவிட்டார், மல்லையா. 2017ல் பிரிட்டனில் கைதாகி, பின்னர் ஜாமினில் வெளியே
வந்தார்.இந்தியாவில் அவரது பெயர் கெட்டுப்போய்விட்ட போதிலும், இந்திய பண்டிகைகளை ஒட்டி, தன் வாழ்த்துகளை டுவிட்டரில் தெரிவித்து வருகிறார்.தற்போது விநாயகர் சதுர்த்தி வாழ்த்து சொல்லி, நெட்டிசன்களிடம் சிக்கியிருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published.