பயிர்ச்செய்கைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் விலங்குகளின் பட்டியலில் இருந்து, காட்டு யானைகளை நீக்க நடவடிக்கை எடுக்குமாறு, விவசாயம், வனஜீவராசிகள் மற்றும் வனவள பாதுகாப்பு அமைச்சர் மஹிந்த அமரவீர, அதிகாரிகளை அறிவுறுத்தியுள்ளார்.
பயிர்களுக்கு சேதம் விளைவிக்கும் விலங்குகளிடையே, காட்டு யானைகளால் பயிர்களுக்கு ஏற்படும் சேதம் 20 சதவீதம் என்ற அளவானதாகும் என வனஜீவராசிகள் மற்றும் வனவள பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
சுமார் 46 சதவீத சேதங்கள், குரங்கு, பன்றி, மயில், காட்டுப் பன்றி மற்றும் காட்டு அணில் என்பனவற்றால் ஏற்படுவதாக அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.