எரிசக்தி அமைச்சு விசேட அறிவிப்பு!

அடுத்த இரண்டு நாட்களில் மற்றுமொரு டீசல் கப்பல் நாட்டை வந்தடைய உள்ளதாக எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

40,000 மெட்ரிக் தொன் ஒட்டோ டீசல் கப்பல் ஒன்றே இவ்வாறு நாட்டை வந்தடைய உள்ளதாக அமைச்சின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

மேலும், 92 ரக ஒக்டேன் பெற்றோல் கப்பல் ஒன்றும் எதிர்வரும் 27 மற்றும் 29ஆம் திகதிகளில் இலங்கைக்கு வரவுள்ளது.

குறித்த கப்பலில் 33,000 மெற்றிக் தொன் பெற்றோல் இருப்பு உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, நாட்டை வந்தடைந்த 30,000 மெற்றிக் தொன் சுப்பர் டீசல் கப்பலில் இருந்து தரையிறக்கும் பணிகள் இன்று (25) இடம்பெறவுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published.