
அத்தியாவசிய சேவைகளுக்காக அதிக எரிபொருள் ஒதுக்கீட்டை வழங்குவதற்கு தீர்மானிக்கப்படடுள்ளது.
இதற்கான நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.
தேசிய எரிபொருள் அனுமதி முறைமை தொடர்பான முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம் இடம்பெற்றுள்ளதுடன், கடந்த 3 வாரங்களின் தரவுகளை ஒப்பிடும் போது வாகனப் பதிவுகள் மற்றும் எரிபொருளை பெற்றுக் கொண்டோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளமை தெரியவந்துள்ளது.
எனினும், எரிபொருள் பயன்பாடு குறைவாக காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனிடையே, வாகனம் அல்லாத எரிபொருள் தேவைக்காக சுற்றுலா எரிபொருள் அனுமதி செப்டம்பர் முதல் வாரத்தில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.