மே 09 தாக்குதல் விசாரணைகள் நிறைவு

மே 09ஆம் திகதி நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் விசாரணைகள் நிறைவடைந்துள்ளன.

சுமார் 35 அதிகாரிகளிடம் சாட்சிகளை பதிவு செய்ததாக குறித்த குழு தெரிவித்துள்ளது.

முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா, பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன, மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன் ஆகியோர் இவர்களுள் அடங்குகின்றனர்.

கடந்த மே மாதம் 9ஆம் திகதி நாட்டில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களை தடுப்பதில் பாதுகாப்புப் படையினர் ஏதேனும் தவறிழைத்துள்ளார்களா என்பது குறித்தும் இந்த குழு ஆராய்கின்றது.

இந்த அறிக்கை மிக விரைவில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்கப்படவுள்ளது.

குறித்த குழுவின் தலைவராக முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னாகொட செயற்பட்டதுடன், முன்னாள் இராணுவத் தளபதி தயா ரத்நாயக்க மற்றும் முன்னாள் விமானப்படைத் தளபதி மார்ஷல் ஆஃப் எயார் ஃபோர்ஸ் ரொஷான் குணதில ஆகியோர் இதன் ஏனைய அங்கத்தவர்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE