இலங்கைக்கு மீண்டும் 10 ஆயிரம் இந்திய ரூபாவை வழங்கிய தமிழக யாசகர்

தமிழகத்தின் தூத்துக்குடி சாத்தான்குளம் ஆலங்கிணறு கிராமத்தை சேர்ந்த பூல் பாண்டியன் எனற் யாசகர் மீண்டும் இலங்கை நிவாரண நிதிக்காக 10 ஆயிரம் இந்திய ரூபாவை வழங்கியுள்ளார்.

விருதுநகர் இருக்கன்டி கோயில் திருவிழாவில் யாசகம் செய்து கிடைத்த 10 ஆயிரம் ரூபாவை இலங்கை நிவாரண நிதிக்காக விருதுநகர் மாவட்ட ஆட்சியாளரிடம் நேற்று கையளித்துள்ளார்.

72 வயதான பூல் பாண்டியன் தனது மனைவி உயிரிழந்த பின்னர் யாசகம் பெற ஆரம்பித்ததுடன், அதில் கிடைக்கும் பணத்தை கொரோன, கல்வி உதவி தொகை என இதுவரை 5 லட்சத்து 60 ஆயிரம் ரூபாவை நன்கொடயாக வழங்கியுள்ளார்.

வேலுர், திருவண்ணாமலை, திருச்சி, மதுவரை, திண்டுகல், திநெல்வேலி ஆகிய மாவட்டங்களின் ஆட்சியாளர் அலுவலகங்களுக்கு சென்று நேரடியாக நிவாரண நிதியை வழங்கியுள்ளார்.

பூல் பாண்டியன் என்ற இந்த நபர் ஏற்கனவே இலங்கையர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக 20 ஆயிரம் இந்திய ரூபாவை சென்னை தலைமைச் செயலகத்தில் வழங்கியிருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE