
ஆஸ்திரேலியாவின் கான்பெர்ரா விமான நிலையத்தில் இன்று திடீரென துப்பாக்கிச் சூடு நடத்திய நபரை போலீசார் கைது செய்தனர்.
கான்பெர்ரா விமான நிலையத்தில் திடீரென துப்பாக்கிச் சுடும் சத்தம் கேட்டதை தொடர்ந்து, அங்கிருந்தவர்கள் அலற தொடங்கினர். அங்கிருந்த பயணிகள் வெளியேற்றிய போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்திய நபரை கைது செய்தனர். அவரிடமிருந்த துப்பாக்கியையும் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.