7 மாதங்களில் 6 இலட்சம் கடவுச்சீட்டுக்கள்

நாட்டில் கடந்த 7 மாதங்களில் சுமார் 6 இலட்சம் கடவுச்சீட்டுகள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக குடிவரவு – குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

குடிவரவு  –  குடியகல்வு திணைக்களத்தின் பிரதி கட்டுப்பாட்டாளர் பியுமி பண்டார இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில் ,

நாட்டில் முதல் ஏழு மாதங்களில் சுமார் 6 இலட்சம் கடவுச்சீட்டுகள் விநியோகிக்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு இதே காலப்பகுதியில் 147,192 கடவுச்சீட்டுகளே விநியோகிக்கப்பட்டுள்ளன.

கடந்த ஜூலை மாதத்தில் ஒருநாள் மற்றும் சாதாரண சேவைகளில் கடவுச்சீட்டுக்களைப் பெற்றுக் கொள்வதற்காக 101,777 விண்ணப்பங்கள் கிடைத்துள்ளன. இவற்றலி; 98,124 பேருக்கு மாத்திரமே கடவுச்சீட்டுக்களை வழங்க முடிந்துள்ளது

மத்திய வங்கியின் அண்மைய அறிக்கையின்படி இந்த ஆண்டின் முதல் அiறாயண்டில் 140,701 பேர் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக சென்றுள்ளனர். எனினும் 2021 ஆம் ஆண்டில் 117,952 பேர் மட்டுமே வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக சென்றுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.