பொதுப் போக்குவரத்தில் ஈடுபடும் முச்சக்கரவண்டிகளுக்கு வாராந்தம் 30 லீற்றர் பெற்றோல் வழங்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுப்பதாக அகில இலங்கை முச்சக்கரவண்டி சாரதிகள் சங்கங்கம் தெரிவித்துள்ளது.
வாரத்தில் ஆறு நாட்களுக்கு ஒவ்வொரு முச்சக்கரவண்டிக்கும் நாளாந்தம் 5-6 லீற்றர் எரிபொருளை வழங்குமாறு முச்சக்கர வண்டி தொழிற்சங்கங்கள் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சரிடம் சங்கம் விடுத்துள்ளது.
அண்மைக்காலமாக அதிக விலைக்கு எரிபொருள் விற்பனை செய்தமை தொடர்பில் முச்சக்கரவண்டி சாரதிகளுக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளதாகவும் எரிபொருள் மோசடியில் ஈடுபடும் நபர்களுக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்துமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுப்பதாக சங்கத்தின் செயலாளர் கபில கலபிடகே தெரிவித்தார்.
நாட்டில் 950,000 பதிவுசெய்யப்பட்ட முச்சக்கர வண்டி சாரதிகள் இருப்பதாகவும் வாரத்தில் ஆறு நாட்களும் இயங்குவதற்கு 5-6 லீற்றர் எரிபொருளைப் பெறுவதை உறுதிப்படுத்துமாறு எரிசக்தி அமைச்சரிடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.