20 இற்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் கட்சிதாவல்!

ஆகஸ்ட் 03 ஆம் திகதி புதிய நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்கவுள்ள நிலையில் 20 இற்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் கட்சிதாவ உள்ளனர் என தகவல் வெளியாகவுள்ளது.

எதிரணியில் இருந்து ஒரு குழு ஆளுங்கட்சி பக்கம் தாவவுள்ளதாகவும் ஆளுங்கட்சி பக்கம் உள்ள ஒரு குழு எதிரணியில் இணையவுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர்களான குமார் வெல்கம, கபீர் ஹாசிம், மயந்த திஸாநாயக்க அலவத்துவல, அஜித் மன்னப்பெரும மற்றும் கிங்ஸ் நெல்சன் ஆகியோர் ரணிலுடன் சங்கமிக்கவுள்ளனர்.

அதேபோல ஆளும் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ், டலஸ் அழகப்பெரும, நாலக கொடஹேவா, சன்ன ஜயசுமன, உதயன கிரிந்திகொட, வசந்த யாப்பா பண்டார, டிலான் பெரேரா, திலக் ராஜபக்ச, உபுல் கலப்பட்டி, சரத் குமாரசிறி மற்றும் லலித் எல்லாவல ஆகியோர் எதிர்க்கட்சியில் அமரவுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE