நாட்டு மக்களுக்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவோம்,ஜனநாயகத்தை பாதுகாக்க சட்டம் முழுமையாக செயற்படுத்தப்படும், ஜனநாயகத்திற்கு முரணாக எவராலும் செயற்பட முடியாது என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் இன்றைய தினம் பிரதமராக பதவி பிரமாணம் செய்துக்கொண்டதை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
சமூக கட்டமைப்பில் காணப்படும் அடிப்படை பிரச்சினைகளுக்கு நட்பு நாடுகள் மற்றும் சர்வதேச நிறுவனங்களின் ஆதரவுடன் தீர்வு காண அரசாங்கம் உரிய நடவடிக்கையினை மேற்கொள்ளப்பட்டுள்ளது. எரிபொருள்,எரிவாயு ஆகிய சேவை கட்டமைப்பு சிறந்த முறையில் விநியோகிக்கப்படும்.
நாட்டு மக்களுக்கு அர்ப்பணிப்புடன் செயற்படுவோம். பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு கண்டால் சமூக கட்டமைப்பில் காணப்படும் ஏனைய பிரச்சினைகள் இயல்காகவே இல்லாமல் போகும்.
அரசியல் ரீதியில் மாறுப்பட்ட கொள்கை காணப்பட்டாலும்,நாட்டுக்கான ஒன்றினைந்துள்ளோம். நாட்டுக்காகவும் அர்ப்பணிப்புடன் செயற்படுவோம்.ஜனநாயகத்தை உறுதிப்படுத்த சட்டத்தை முறையாக செயற்படுத்துவோம்.
நாட்டு மக்கள் எதிர்பார்த்த அரசியல் மற்றும் சமூக மாற்றம் நிச்சயம் ஏற்படுத்தப்படும்.ஜனநாயகத்திற்கு முரணாக எவரும் செயற்பட இடமளிக்க முடியாது.ஒன்றினைந்து செயற்பட சகல அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளோம் என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.