இலங்கைக்கு 1800 மில்லியன் டொலர்களை வழங்கிய இந்தியா!

கடந்த 10 ஆண்டுகளில் இந்தியா, இலங்கைக்கு 8 துறைகளுக்கு கடன்வரிகளை வழங்கியுள்ளதாக அந்த நாட்டின் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதன்படி 1850.64 மில்லியன் டொலர்களை இந்தியா, இலங்கைக்கு வழங்கியுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் இன்று தெரிவித்துள்ளார்.

இந்த கடன்வரிகள், தொடரூந்து, உட்கட்டமைப்பு, பாதுகாப்பு, எரிசக்தி, பெற்றோலியம் மற்றும் உரம் போன்றவற்றுக்காக வழங்கப்பட்டுள்ளது என்று திராவிட முன்னேற்றக்கழக உறுப்பினர் ஒருவர் லோக்சபாவில் கேட்க கேள்விக்கான பதிலாக ஜெய்சங்கர் தெரிவித்தார்.

இந்தநிலையில் அயலில் உள்ளவருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் இந்தியா, தொடர்ந்தும் இலங்கைக்கு உதவிகளை வழங்கி வருவதாக அவர் குறிப்பிட்டார்.

கடன்வரிகளுக்கு அப்பால் இந்தியா, இலங்கைக்கு மனிதாபிமான உதவிகைளையும் வழங்கியுள்ளதாக ஜெய்சங்கர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published.