புதிய ஜனாதிபதி ரணில் கொண்டுவந்த சட்டங்கள்!!

 

ஜனாதிபதியை குறிப்பிடும் போது அதிமேதகு என்ற அடைமொழி பயன்படுத்தப்படுவதை உத்தியோகபூர்வமாக தடை செய்வதாக பதில் ஜனாதிபதி பிரதமர் ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார்.

அத்துடன், ஜனாதிபதி கொடியையும் இரத்து செய்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பதில் ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர், விடுத்த விசேட அறிவிப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

உடனடியாக நியமிக்கப்படும் புதிய ஜனாதிபதிக்கு 19 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை அமுல்படுத்துவதற்கு தேவையான பின்னணியை இந்த சில நாட்களில் செய்து தரப்படும் என பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.

பதில் ஜனாதிபதி என்ற ரீதியில் தாம் 2 விசேட நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும், அதற்கமைவாக ஜனாதிபதி பயன்படுத்திய ‘அதிமேதகு’ என்ற பதத்திற்கு உத்தியோகபூர்வமாக தடை விதித்து ஜனாதிபதி கொடியை இரத்துச் செய்வதாகவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் உரையாற்றுகையில், நாட்டையும் மக்களையும் மனதில் கொண்டே இந்தப் பொறுப்பை ஏற்றுக்கொண்டேன்.

முதலில் நாட்டை கட்டியெழுப்புவோம். இந்த இக்கட்டான சூழ்நிலையிலிருந்து மீள்வோம். அதன் பிறகு கட்சி அரசியலுக்கு திரும்பலாம்.

ஜனநாயகப் போராட்டங்களை நான் எப்போதும் மதிக்கிறேன். எனினும், போராடுபவர்களும் கிளர்ச்சியாளர்களும் வேறுவேறானவர்கள்.

இந்த இரண்டு பகுதிகளும் நம் நாட்டில் உள்ளன. போராட்டகாரர்கள் தங்கள் செயல்பாடுகளை அமைதியாக தொடரலாம். ஆனால் கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக சட்டம் அமுல்படுத்தப்படுகிறது.

அண்மையில் இரண்டு ராணுவ வீரர்கள் கடுமையாக தாக்கப்பட்டனர். இரண்டு துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 24 ராணுவ வீரர்கள் காயமடைந்துள்ளனர்.

இப்போதும் இந்தக் கிளர்ச்சியாளர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.

எதிர்வரும் 20 ஆம் திகதி நடைபெற உள்ள புதிய ஜனாதிபதி தெரிவில் செல்வாக்கு செலுத்தி வருகின்றனர்.

நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பையும், நாடாளுமன்றத்தின் பாதுகாப்பையும் பேண, பதில் ஜனாதிபதி என்ற வகையில் நடவடிக்கை எடுப்பேன்.

நான் எப்போதும் ஜனநாயக ரீதியில் செயற்படுகிறேன். அரசியலமைப்பின்படி செயல்படும் நான் அதற்கு புறம்பாக ஒருபோதும் செயல்படமாட்டேன்.

நாட்டில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்தால் மக்கள் பல்வேறு பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். உணவு, எரிபொருள், எரிவாயு, மின்சாரம் வழங்குவது கடினம்.

எனவே, சட்டம் ஒழுங்கை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைவரும் நாட்டை கட்டியெழுப்ப ஒன்றுபடுவோம் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE