கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணில் ஜூன் மாதத்தில் பணவீக்கம் 54.6 சதவீதமாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதன்படி உணவு மற்றும் உணவு அல்லாத பொருட்களின் மாதாந்திர பணவீக்கம் ஜூன் மாதத்தில் பணவீக்கத்தை 50 சதவீதத்திற்கு மேல் உயர்த்தியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி (CBSL) தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டு மே மாதத்தில் 14.2 சதவீதமாக இருந்த ஆண்டு சராசரி பணவீக்கம் ஜூன் இறுதியில் 18.4 சதவீதமாக உயர்ந்துள்ளது.
அதேவேளை, இந்த மாதத்தில் உணவுப் பொருட்களின் விலைகளும் 80 வீதம் அதிகரித்துள்ளதாக மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் உணவு அல்லாத பொருட்களின் விலைகள் 42.4 வீதம் அதிகரித்துள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.
அரிசி, மிளகாய், தானியங்கள் மற்றும் பிற உணவுப் பொருட்களின் விலை உயர்வைப் போலவே, தற்போதைய எரிபொருள் நெருக்கடியைத் தொடர்ந்து காய்கறி விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளமை , இதில் பெரும் தாக்கம் செலுத்துவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


