தங்கத்தின் நிகர பெறுமதிக்கு உயர்ந்த துவிச்சக்கர வண்டி விலை !!

எரிபொருள் நெருக்கடிக்கு மத்தியில், கிராமங்களிலும், நகரங்களிலும் உள்ள மக்கள் துவிச்சக்கர வண்டிகளையும், அதன் உதிரிப்பாகங்களையும் கொள்வனவு செய்யும் போக்கு குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

துவிச்சகர வண்டிகளைக் கொள்வனவு செய்வதற்காக, நாட்டின் பல பாகங்களிலும் உள்ள துவிச்சக்கரவண்டி விற்பனை நிலையங்களை மக்கள் அதிகாலையில் நாடுவதாக தெரியவந்துள்ளது.

மக்கள் துவிச்சக்கர வண்டிகளைக் கொள்வனவு செய்வது அதிகரித்துள்ள சூழ்நிலையில், அதன் விலையும் அதிகரித்துள்ளது. தற்போதுவரை சாதாரண துவிச்சக்கரவண்டி ஒன்றின் விலை, 50 ஆயிரம் ரூபாவைக் கடந்துள்ளதாக விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அத்துடன், புதிய வடிவிலான மற்றும் வெவ்வேறு தொழில்நுட்பங்களுடன் தயாரிக்கப்பட்ட துவிச்சக்கர வண்டிகள், ஒரு இலட்சம் ரூபா வரையான விலையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

அதேவேளை துவிச்சக்கர வண்டி உதிரிப்பாகங்களின் விற்பனையும் அதிகரித்துள்ளதாக விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர். இதன்போது உதிரிப்பாகங்களின் விலையும் அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE