தென் ஆப்ரிக்க விடுதியில்20 இளைஞர்கள் பலி

தென் ஆப்ரிக்காவில் இரவு விடுதியில், 20 இளைஞர்கள் மர்மமான முறையில் இறந்து கிடந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தென் ஆப்ரிக்காவின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள கிழக்கு லண்டன் நகரில் உள்ள இரவு விடுதியில் 18 – 20 வயதுடைய 20 இளைஞர்கள் நேற்று அதிகாலையில் இறந்து கிடந்தனர்.

தகவல் அறிந்து போலீசார் சென்ற போது மேஜை, நாற்காலிகள் மற்றும் தரையில் இளைஞர்கள் இறந்து கிடந்தனர். அவர்களது உடலில் காயம் எதுவும் இல்லை. தேர்வுகள் முடிந்ததையடுத்து நேற்று முன் தினம் இரவு, இளைஞர்கள் கிழக்கு லண்டன் இரவு விடுதியில் கூடி கொண்டாடியுள்ளனர்.

அவர்களுக்குள் தகராறு எதுவும் நடந்ததா அல்லது அளவுக்கு அதிகமாக மது அருந்தியதால் உயிரிழந்தனரா என போலீசார் விசாரித்து வருகின்றனர். உடற்கூறு ஆய்வுக்காக உடல்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published.