இந்தியாவை சேர்ந்த மூன்று நிறுவனங்களுக்கு, தொற்று நோய் ஆய்வுக்காக, அமெரிக்கா 915 கோடி ரூபாய் வழங்குவதாக அறிவித்துள்ளது.
அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் உலக நாடுகளில் தொற்று நோய் தடுப்பு கட்டுப்பாடு உள்ளிட்ட ஆய்வுகளுக்கு நிதியுதவி செய்கிறது. இந்த மையம், இந்தியாவைச் சேர்ந்த மூன்று நிறுவனங்களுக்கு, தொற்று நோய் தடுப்பு உள்ளிட்ட ஆய்வுகளுக்காக, 915 கோடி ரூபாய் நிதியுதவி வழங்குவதாக அறிவித்துள்ளது.
இதன்படி, டில்லியில் உள்ள இந்திய மருத்துவ கவுன்சில் புனேவின் தேசிய வைரஸ் ஆய்வு மையம் சென்னையில் உள்ள தேசிய தொற்று நோயியல் மையம் ஆகிய முன்றும், அமெரிக்க நிதியுதவியை பெற உள்ளன.கொரோனா வைரஸ் பல்வேறு வகையில் உருமாறி, அதிக வீரியமுள்ள வைரசாக மாறி பரவி வருகிறது. இத்தகைய வைரஸ்களை எதிர்கொள்ள, தடுக்க தேவைப்படும் ஆய்வுகளுக்கு, இந்த நிதி பயன்படுத்தப்படும்.
அமெரிக்க நிறுவனங்கள் வெளிநாட்டு வல்லுனர்களை பணிக்கு அமர்த்த, ‘எச் – 1பி விசா’ வழங்குகிறது. இதன்படி, 2005ல் வழங்கப்பட்ட, 85 ஆயிரம் விசாக்கள் தான், 17 ஆண்டுகளை கடந்த நிலையில் தற்போதும் வழங்கப்படுகிறது. ”எனவே எச் – 1பி விசா வழங்குவதை அதிகரிக்க வேண்டும்,” என, அமெரிக்க குடியரசு கட்சி முன்னாள் எம்.பி., மியா லவ் வலியுறுத்தியுள்ளார்.