மே 9 வன்முறைகள் தொடர்பில் மேலும் 10 பேர் கைது

கடந்த மே மாதம் 9 ஆம் திகதி நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்கள் தொடர்பில் மேலும் 10 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இன்று (15) காலை நிறைவடைந்த 24 மணித்தியாலங்களுக்குள் இவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் கூறினர்.

வன்முறை சம்பவங்கள் தொடர்பில் கைது செய்யப்பட்ட 4 சந்தேகநபர்களுக்கு நேற்று பிணை வழங்கப்பட்டுள்ளது.

மேலும் 9 சந்தேகநபர்கள் நேற்று விளக்கமறியலில் வைக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அதற்கமைய, வன்முறை சம்பவங்கள் தொடர்பில் கைது செய்யப்பட்டவர்களில் இதுவரை 1096 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

2784 பேர் மொத்தமாக கைது செய்யப்பட்டிருந்தனர்.

கடந்த மே மாதம் 9 ஆம் திகதி மற்றும் அதனை அண்மித்த நாட்களில் 857 வன்முறை சம்பவங்கள் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE