அரச ஊடக நிறுவனங்களுக்கு புதிய தலைவர்கள்

அரச ஊடக நிறுவனங்களுக்கு புதிய தலைவர்கள் மற்றும் நிர்வாக சபை உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அமைச்சர் பந்துல குணவர்தன  வெகுஜன ஊடகம் மற்றும் தகவல் அமைச்சில் வைத்து இந்த நியமனங்களை வழங்கினார்.

அதனடிப்படையில் ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் புதிய தலைவராக அசங்க பிரியநாத் ஜயசூரிய நியமிக்கப்பட்டுள்ளார்.

அத்துடன் சுயாதீன தொலைக்காட்சி வலையமைப்பின் தலைவராக பட்டய கணக்காளர் கனக அமரசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தலைவராக ஹட்சன் சமரசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE