பாராளுமன்ற பாதைக்கு பூட்டு

பாராளுமன்ற வளாகத்தை சுற்றியுள்ள பல வீதிகள் இன்றும் நாளையும் மூடப்படும் என இலங்கை பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

நாடாளுமன்ற அமர்வுகள் நடைபெறும் காலப்பகுதியில் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டங்கள் இடம்பெறுவதை தடுக்கவும், எம்.பிக்கள் மற்றும் நாடாளுமன்ற ஊழியர்களுக்கு ஏற்படும் இன்னல்களை தவிர்க்கவும் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்ற நுழைவு வீதி மூடப்பட்டுள்ளதால் பத்தரமுல்ல பகுதியைச் சூழவுள்ள வீதிகளில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

பத்தரமுல்லை, பெலவத்த மற்றும் தலவத்துகொட ஆகிய பகுதிகளில் இவ்வாறு கடுமையான வாகன நெரிசல் நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பாராளுமன்ற நுழைவு வீதிகள் முற்றாக மூடப்பட்டுள்ளதால் வாகன சாரதிகள் இன்று மற்றும் நாளை மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு பொலிஸ் ஊடகப்பிரிவு கேட்டுக்கொண்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.