இலங்கைக்கு கடன் வழங்குவதற்கான நடவடிக்கைகள் ஆரம்ப கட்டத்தில் உள்ளதாக சர்வதேச நாணய நிதியம் (IMF) தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், நிலையான கடன் தீர்வுத் திட்டத்தின் அடிப்படையில் மட்டுமே மேலதிக நடவடிக்கை எடுக்கப்படும் என சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான தூதரகத்தின் தலைவர் மசாஹிரோ நோசாகி தெரிவித்துள்ளார்.
தற்போது அமெரிக்காவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கை நிதியமைச்சர் அலி சப்ரிக்கும் சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளருக்கும் இடையில் ஆரம்பக்கட்ட கலந்துரையாடல் இடம்பெற்றதாகவும் அவர் தெரிவித்தார்.
இலங்கையின் தற்போதைய கடன் மற்றும் எதிர்கால பொருளாதார திட்டங்கள் குறித்து சர்வதேச நாணய நிதியம் (IMF) கவனம் செலுத்தி வருவதாக மசாஹிரோ நோசாகி தெரிவித்துள்ளார்.