துனிசியாவை சேர்ந்த ஒரு டேங்கர் கப்பல், 750 டன் டீசலுடன் கடலில் மூழ்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
வட ஆப்ரிக்க நாடான துனிசியாவை சேர்ந்த ஒரு எண்ணெய் டேங்கர் கப்பல், 750 டன் டீசலுடன், கேப்ஸ் வளைகுடா கடல் பகுதியில் நேற்று முன்தினம் இரவு சென்றது. அப்போது அங்கு நிலவிய மோசமான வானிலை காரணமாக, அந்த கப்பல் கடலில் கவிழ்ந்தது.தகவலறிந்து அங்கு விரைந்த கடலோர காவல் படையினர், கப்பலில் சிக்கி இருந்த குழுவினரை பாதுகாப்பாக மீட்டனர்.
இதற்கிடையே, அந்த கப்பல் நேற்று அதிகாலை கடலில் மூழ்கியது. கப்பல் டேங்கரில் இருந்து டீசல் இதுவரை வெளியே கசியவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.எனினும், அப்படி டீசல் வெளியேறினால் அந்த கடல் பகுதியில் பேரழிவு ஏற்படக்கூடும் என்பதால், அதை தடுக்க தேவையான நடவடிக்கைகள் குறித்து துனிசியா நாட்டின் சுற்றுச்சூழல் துறை அதிகாரிகள் அவசர ஆலோசனை நடத்தினர்.
டீசல் வெளியேறினால், அது கடலில் பரவாமல் இருக்க, கப்பல் மூழ்கிய இடத்தை சுற்றி பெரிய அளவிலான தார்ப்பாய்கள் போடப்பட்டு வருகின்றன.