சித்திரைப் புதுவருடப்பிறப்பை கொண்டாடும் வேளையிலும் இலங்கையில் மக்கள் போராட்டம் இன்றும் தொடர்கின்றது.
ஜனாதிபதியை பதவியில் இருந்து விலகுமாறு வலியுறுத்தி ஜனாதிபதி அலுவலகத்திற்கு முன்பாக இன்று 6 ஆவது நாளாகவும் மக்கள் பேராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பல்லாயிரக்கணக்கான இளைஞர் , யுவதிகள் உள்ளிட்ட சகல தரப்பினரையும் இணைத்து ஆரம்பிக்கப்பட்ட இந்த ஆர்ப்பாட்டம் மிகவும் உணர்வு பூர்வமாகவும் , வலிமையானதாகவும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வருகை தந்துள்ள இளைஞர்களினால் கடந்த 9 ஆம் திகதி குறித்த ஆர்ப்பாட்டம் ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.