கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் போராட்டம் நடத்த செல்ல முயற்சித்த போது, பொலிஸார் தடைகளை ஏற்படுத்தி அவர்களை தடுத்துள்ளனர். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேதாச உட்பட சம்பிக்க ரணவக்க, ராஜித சேனாரத்ன, மனோ கணேசன், கபீர் ஹாசிம், மனுஷ நாணயக்கார, எஸ்.எம். மரிக்கார் தமிழத் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவர் றிசார்ட் பதியூதீன், முஜிபுர் ரஹ்மான் உட்பட பலர் கலந்துக்கொண்டுள்ளனர். எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பொலிஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் இந்த ஆர்பாட்டத்தில் ஊடங்களுக்கு முன் பேசிய எதிர்க்கட்சியின் உறுப்பினர்கள் சுதந்திரத்தின் தந்தையான டி.எஸ்.சேனாாநாயக்கவிடம் மக்களின் குறைகளை எடுத்து கூற அனுமதி வழங்குமாறு பொலிஸாரிடம் கூறினர்.