கொட்டகலையில் மக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்

கொட்டகலை நகரில் கூடுதல் விலைக்கு சமையல் எரிவாயு விற்பனை செய்யப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், தமக்கு பட்டியல் விலையில் சமையல் எரிவாயுவை வழங்குமாறு வலியுறுத்தியும் நுகர்வோர் இன்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் அட்டன் – நுவரெலியா வீதி ஊடான போக்குவரத்து சுமார் ஒரு மணிநேரம் ஸ்தம்பிதமடைந்தது.

சமையல் எரிவாயு விற்பனை நிலையத்தில் இருந்தவர்களுக்கும், நுகர்வோருக்கும் இடையில் கடும் வாய்த்தர்க்கமும் ஏற்பட்டது.

நாடாளாவிய ரீதியில் சமையல் எரிவாயுவுக்கு கடும் தட்டுப்பாடு நிலவிவரும் நிலையில், கொட்டகலை பகுதியிலும் தட்டுப்பாடு நிலைமை நீடித்தது.

இந்நிலையில் சமையல் எரிவாயுவை கொள்வனவு செய்வதற்கு இன்றும் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

கொட்டகலை நகரில் இரு வர்த்தக நிலையங்கள் ஊடாக சமையல் எரிவாயு விநியோகிக்கப்படுகின்றது, அதில் ஒரு கடையில் லிட்ரோ கேஸ் ஒன்று சுமார் 4 ஆயிரத்து 500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

“லாப் கேஸின் விலை அதிகரித்துள்ளபோதிலும் லிட்ரோ கேஸின் விலை இன்னும் அதிகரிக்கப்படவில்லை எனவே, 75 வீத விலை அதிகரிப்புடன் எதற்காக லிட்ரோ கேஸ் விற்பனை செய்யப்பட வேண்டும்.” என நுகர்வோர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

அத்தியாவசிய தேவையுள்ள சிலர் அதிக விலைக்கு சமையல் எரிவாயுவை பெற்றுச்சென்றுள்ளனர் எனினும், ஏனையோர் முறையற்ற விலை அதிகரிப்புக்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டு, தமக்கு நியாயம் வேண்டும் என வாதாடியுள்ளனர்.

சம்பவ இடத்துக்கு ஊடகவியலாளர்கள் சென்ற பிறகு, வர்த்தக நிலையத்தை மூடிவிட்டு, வர்த்தகர் சென்றுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE